தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா..? - அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது... | TNSTC

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்குச் செல்வோருக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரியும் நபர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, அக்டோபர் 21ஆம் தேதி அரசுப் பேருந்துகளில் செல்வோர், இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22ஆம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் நாளையும், 23ஆம் தேதி வெளியூர்களுக்குச் செல்வோர் நாளை மறுதினமும் முன்பதிவு செய்யலாம் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போக்குவரத்து துறையின் இணையதளம், டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி வாயிலாகவும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்