பொதுத் தேர்வு மாணவர்களின் விவரங்கள் விற்பனையா? - வெளியான பேரம் பேசும் ஆடியோ

x

சமூக வலைதளங்களில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் சுயவிவரங்கள் விற்பனைக்கு எனக்கூறி பரவிய விளம்பர பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை தங்களது கல்லூரியில் சேர சொல்லி அலைமோதும் கல்லூரிகளுக்கு இந்த விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கு பெற்று பல தனியார் கல்லூரிகள் மாணவர்களை தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் விவரங்களை கையாளக்கூடிய பிரிவுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவர் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்