அனுமதியின்றி நடத்தப்பட்ட காளை விடும் திருவிழா... காளைகள் முட்டி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, அனுமதியின்றி நடத்தப்பட்ட காளைவிடும் திருவிழாவில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

வடவேடு ஊராட்சி, மங்களபுரம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளாவில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை வீரர்கள் உற்சாகப்படுத்தினர்.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இலக்கை கடந்த காளைக்கு முதல் பரிசாக, இருசக்கர வாகனம் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் காயமடைந்த இளைஞர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்