விரைவு ரயிலில் இருந்து திடீர் புகை... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்... அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

• அரக்கோணம் ரயில் நிலையத்தில், விரைவு ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால், பயணிகள்அலறி அடித்து ஓடினார்கள். • சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், அரக்கோணம் வந்தபோது, எஞ்சினுக்குப் பக்கத்தில் உள்ள பெட்டியில் இருந்து புகை வெளியேறியது. • இதனால் ரயிலில் தீப்பிடித்து விட்டதாக பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். • தகவல் அறிந்து வந்து அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு சாதனத்தை யாரோ தவறுதலாக அழுத்தியதால் புகை வெளியேறியது தெரியவந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com