"என்எல்சிக்கு 420 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல்" - என்எல்சி இந்தியா நிறுவனம் தகவல்

x

நிலக்கரி வெட்டுவதற்கு தேவையான நிலங்கள் கையிருப்பில் இல்லாததால், பழுப்பு நிலக்கரி உற்பத்தியும், மின்னுற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டால், தொழில்கள் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் என்றும், வளர்ச்சியை நோக்கி இருக்கும் மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்ப்பாதி, மும்முடிசோழகன், ஊ.ஆதனூர் மற்றும் கத்தாழை கிராமங்களில் 594 நில உரிமையாளர்கள் தங்கள் 420 ஏக்கர் விளைநிலங்களை என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வழங்க எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு வீட்டை இழக்கும் உரிமையாளருக்கு மொத்த இழப்பீடாக 75 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது என்றும், நில எடுப்பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு என்எல்சி நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்