"சம்மதமின்றி நெருங்கினால் அது பாலியல் வன்கொடுமையே" - நீதிமன்றம் பரபரப்பு கருத்து

x

கேரளாவில் எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சம்மதமின்றி நெருங்கினால் அது பாலியல் வன்கொடுமையே என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிள்ளி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியை ஒருவர் புகாரளித்துள்ளார். இந்த வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிள்ளியின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, சம்மதமின்றி நெருங்கினால் அது பாலியல் வன்கொடுமையே என கேரள உயர்நீதிமன்றம் கூறியது. மேலும், எல்டோஸ் குன்னப்பிள்ளி மீதான குற்றச்சாட்டு வழக்கத்திற்கு மாறான கதை போல் உள்ளதாக தெரிகிறது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்