லாபம் ஈட்டுவதில் உலகின் நம்பர் ஒன் நிறுவனம் ஆப்பிள் - ஒரு வினாடிக்கு இத்தனை லட்சங்களா..? | APPLE

x

2022இல் ஆப்பிள் நிறுவனத்தின் நிகர லாபம் 9 ஆயிரத்து 980 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 820 டாலர் லாபம் ஈட்டி வருகிறது. இந்திய ரூபாயில் விநாடிக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டுகிறது.

இரண்டாம் இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு விநாடிக்கு 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் ஈட்டுகிறது.

மூன்றாம் இடத்தில் உள்ள பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் நிகர லாபம் விநாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில், கூகுள் நிறுவனம் நான்காம் இடத்திலும், பேஸ்புக் நிறுவனம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

ஆனால் உலகின் மிகப் பெரிய செயலி மூலமான கால் டேக்ஸி நிறுவனமான யூபர், விநாடிக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்