டெக் உலகில் ராட்சசனை களமிறக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்.. ஆப்பிள் ஐமேக் எனும் திருப்புமுனை..!

x

சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக, உருவெடுத்துள்ள ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி, வளர்த்தெடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற சாதனையாளர். தற்போது 2.62 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய ஆப்பிள், கம்யூட்டர்கள் உற்பத்தியில் உலக அளவில் நான்காம் இடத்திலும், செல்போன் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.இதன் ஐமேக் கம்யூட்டர் மிக நவீனமாகவும், அதி வேகம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு, உலக சந்தையில் கோலோச்சி வருகிறது.

1976ல் சிறிய அளவில் ஆப்பிள் கம்யூட்டர் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், 1985ல் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1997ல் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்ட பின், திவால் நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை மீட்டெடுத்தார். புத்தாக்க முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தி, புதிய ரக கம்யூட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை உருவாக்க வகை செய்தார்.

1998ல் ஐமேக் கம்யூட்டரை அறிமுகப்படுத்தி, கம்யூட்டர் துறையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தினார். இதர ரக கம்யூட்டர்களை விட மிக அதிக வேகத்தில் இயங்கிய ஐமேக்கை, ஒரு இடத்தில் மிக எளிதாக, மிக விரைவாக நிறுவ முடிந்தது. அதன் தோற்றமும், முட்டை வடிவில், மிக அழகாக இருந்ததால், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இணையத்துடன் இதை மிக எளிதாக, விரைவாக இணைக்க முடிந்ததால் விற்பனை வெகுவாக அதிகரித்து, பெரும் ஹிட்டானது. ஐமேக்கின் அடுத்த பதிப்பில், மிக மெலிதான திரையின் பின் பக்கத்தில், கம்யூட்டரின் அனைத்து பாகங்களும் பொருத்தப்பட்டு எளிமைபடுத்தப்பட்டது. ஐமேக் கம்ப்யூட்டரை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய தினம், 1998, மே 6.


Next Story

மேலும் செய்திகள்