5 அம்சங்களுடன் அசத்தல் அப்டேட் கொடுத்த ஆப்பிள்

x

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்-ன் 16 பாயிண்ட் 5 வெர்ஷன் வெளியாகியுள்ளது...

ஆப்பிள் மொபைல் மற்றும் ஐப்பேடுக்கான இயங்குதளமாக விளங்கும் ஐஓஎஸ்-ன் 16 பாயிண்ட் 5 வெளியாகியுள்ளது.

இதில் LGBTQ+ சமூகத்தினரை பெருமைப்படுத்தும் விதமாக பிரத்தியேக வால்பேப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நியூஸ் செயலியில், விளையாட்டிற்கென தனியே ஒரு பிரிவு இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஸ்கிரீன் ரெக்கார்ட் ஆப்ஷனாக ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு சிரியை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய வெர்ஷனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள், இதில் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வேர்ல்ட் வைட் டெவலப்பர்ஸ் கான்ஃபரன்ஸில் (World Wide Developers Conferece) ஐஓஎஸ் 17-வது வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்