மீண்டும் ஒரு மாரடைப்பு மரணம்.. பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பால் அதிர்ச்சியில் தமிழ் சினிமா

x

தமிழ் சினிமாவில், வில்லன் நடிகராக மிரட்டிய கசான் கான், மாரடைப்பால் காலமானார்.


1992 ஆம் ஆண்டு வெளியான செந்தமிழ் பாட்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் கசான் கான். அதன்பின்னர், சேதுபதி ஐபிஎஸ், முறைமாமன், ஆணழகன், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, மாப்பிள்ளை கவுண்டர் உட்பட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து, தனக்னெ தனி முத்திரை பதித்தவர் கசான் கான். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கசான் கான் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்