"ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியது இல்லை" "முழு செலவையும் அரசு பார்த்துக்கொள்ளும்" ...சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமமத்திற்கான அறிவிப்பு

x

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது போன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சௌவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சென்னையில், சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, எல்.முருகன், குஜராத் மாநில நீர்வளத்துறை அமைச்சர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமமத்திற்கான அறிவிப்புகள் மற்றும் இணையதளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் மாண்டவியா,சௌவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்