மலை கிராம மக்கள் வீட்டில் உணவருந்திய அண்ணாமலை..!

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கிராமத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்குள்ள ஒரு வீட்டின் தரையில் அமர்ந்து உணவருந்தினார். பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த பாஜக தலைவர் அண்ணாமலை, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, தாமரைக்கரை கீழ் காலனி பகுதியை சேர்ந்த பொம்மி, கேருச்சி தம்பதியினரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.


Next Story

மேலும் செய்திகள்