"அண்ணாமலையின் அநாகரிக போக்கு.. முதல்வர் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்" - டி.கே.எஸ்.இளங்கோவன்

x

"அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது" - டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்


தமிழக பாஜக தலைவ ர் அண்ணாமலையின் தரம் தாழ்ந்து பேச்சு மூலம், பண்பாட்டைச் சிதைத்து சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டுள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவினர் தரம் தாழ்ந்து பேசுவார்கள் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுவதாக கூறியுள்ள அவர், வாய்ச் சவடால் மூலம் தமிழத்தின் அரசியல் பண்பாட்டை சிதைத்து சீரழிக்கும் வேலையை, பாஜக மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். கடலூரில் செய்தியாளரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அண்ணாமலையின் போக்கு அநாகரீகமானது என கண்டனம் தெரிவித்துள்ள டி.கே.எஸ். இளங்கோவன், தனது செயலுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இனியாவது நாகரிகமும், பண்பாடும் காத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்