அதிமுக பொதுச்செயலாளர் ஆன ஈபிஎஸ் - அண்ணாமலையின் ரியாக்‌ஷன்

• அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். • அவர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com