"தனியாருக்கு தாரைவார்க்க திட்டமா?.. சும்மா இருக்க மாட்டோம்" -தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

x

திமுக அரசு, இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி, நெசவாளர்களை வஞ்சிக்க நினைப்பதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தினத்தில் ஏழை, எளிய மக்கள் புத்தாடை அணிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், இலவச வேட்டி சேலை திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அதை திமுக அரசு முடக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பாக ஜூன் மாதத்தில் வெளியிட வேண்டிய அரசாணையை, 3 மாதங்கள் தாமதமாக அக்டோபர் மாதத்தில்தான் வெளியிட்டுள்ளதாகவும், தரமற்ற நூலை வழங்கி, வேட்டி சேலை உற்பத்தியை தாமதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் வாயிலாக தமிழ்நாடு நெசவாளர்களுக்கு பதிலாக, தனியார் நிறுவனங்கள் பயனடையும்படி மடைமாற்றம் செய்யப்படுகிறதோ? எனவும், இந்த திட்டத்திற்காக அறிவித்த 487 கோடி ரூபாயை, வெளி மாநில தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டால் பாஜக சும்மா இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்