தமிழக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

x

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்குள் தங்கியிருந்து, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராமத்து பணியை காரணம் காட்டி, சுப்பிரமணிய சாமி திருக்கோவில் நிர்வாகக்குழு கோவிலுக்குள் பக்தர்கள் தங்கியிருப்பதை தடைசெய்துள்ளது என சுட்டி காட்டியுள்ளார். வேண்டுதல் நிறைவேற்றக் காத்திருக்கும் பக்தர்களின் பாரம்பரிய உரிமையை பறிக்காமல், அவர்களை கோவிலுக்குள் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்