மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு | annauniversity | students

x

மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை துவங்கும் என்றும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை தங்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ்

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை குறிப்பிட்ட தேதியில் துவக்க உள்ளதாக தெரிவித்தார்.

பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் அவர்கள் தேர்வு செய்த துறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்