ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - வடை தயாரிக்கும் பணி தீவிரம்
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், வருகிற 23-ஆம் தேதி, ஒரு லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 பேர் கொண்ட குழுவினர், 2 ஆயிரத்து 25 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி, வடை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
