திருட்டு பயலே என திட்டியதால் ஆத்திரம்..நண்பனை கொன்றுப்போட்ட கொடூரம்...

x

திருட்டு பயலே என திட்டியதால் ஆத்திரம்...

நண்பனை கொன்றுப்போட்ட கொடூரம்...

நானும் இங்கே வலியிலே... நீயும் அங்கோ சிரிப்பிலே...

திருந்தி வாழ்ந்த திருடன் கொலையாளியான கதை...

வாழ்க்கையில நடந்த மோசமான சம்பவங்களையும், நினைவுகளையும் மறக்கனும்னு தான் இங்கொருத்தர் பிரெண்டோட மது அருந்த போய் இருக்காரு, ஆனா, கட்டிங் போட போட பழைய கதையெல்லாம் பேசி உள்ளுக்குள்ள தூங்கிட்டு மிருகத்தை தட்டி எழுப்பி இருக்காரு அந்த நண்பர், அதுக்கப்றம் அங்க என்ன நடந்துச்சுனு நீங்களே பார்த்து தெரிஞ்சுகோங்க..

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும்னு சொல்லுவாங்க அப்படிதான் இங்க நண்பர்கள் ரெண்டு பேரு மது போதையில போட்ட சாதாரண சண்டை தான் ஒரு கொலையில போய் முடிஞ்சிருக்கு...


போலீஸ் துணையுடன் செங்கத்துரை கிராம தெருக்களில் அந்த நபர் கொண்டு வரப்பட்டார்.

முந்தைய நாள் இரவு நடந்த பயங்கரத்தை அச்சு பிசகாமல் அப்படியே நடித்து காட்டினார்.

சுற்றியிருந்த பொதுமக்களும் போலீசார், அந்த நபர் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தை கேட்டு மிரண்டு போனார்கள்.


ஆம் … இங்கு நடந்திருப்பது ஒரு கொடூர கொலை…

கூட பழகிய நண்பனையே கொடூரமாக கொலை செய்திருக்கிறார் இந்த ஆசாமி.


வீட்டு வாரிசை இழந்துவிட்டு அந்த ஒட்டு மொத்த குடும்பமும் வேதனையில் துடித்ததை ஊரே உச்சு கொட்டி பார்த்தது

யார் இவர்கள்… ஏனிந்த கொடூர கொலை…


கொல்லப்பட்டவர் விஜயராகவன். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செங்கத்துரை சேர்ந்தவர். இவரது தந்தை ரவி. சூலூர் சுற்றுவட்டாரத்தில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்திருக்கிறார். ஊருக்குள் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் விஜயராகவன் அப்படியே ரவிக்கு ஆப்போசிட். மது பழக்கத்துக்கு அடிமையாகி ஊருக்குள் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இரண்டு வருடத்துக்கு முன்பு விஜயராகவனுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அவரின் மது பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்றிருக்கிறார். வேறு யாரிடமும் நிலைத்து நின்று வேலை பார்க்க முடியாததால் விஜயராகவன் அவரது தந்தையோடு கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

நாளாக நாளாக விஜயராகவனின் மது பழக்கம் அதிகரித்திருக்கிறது. முப்பொழுதும் போதையிலேயே திளைத்திருகிறார்.

ரவியோடு பலர் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் திருவாரூரைச் சேர்ந்த ஸ்டாலின். ஸ்டாலினோடு விஜயராகவனுக்கு நல்ல நட்பு இருந்தது. இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

ஸ்டாலின் கட்டிட தொழிலாளியாக அறியப்படாலும் அவரது மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறைக்கு சென்று வந்திருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் விஜயராகவனுக்கும் தெரியும்.

சம்பவம் நடந்த அன்று நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தியிருக்கிறார். போதை தலைக்கேறியதும் கேலி கிண்டல் எல்லை மீறியிருக்கிறது. விஜயராகவன் ஸ்டாலின் கடந்த காலத்தை பற்றியும் அவரது திருட்டு வாழ்கையை பற்றியும் பேசி சிரித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் வார்தை மோதல் வெடித்திருக்கிறது.

விஜயராகவனின் அடாவடிதனத்தை சுட்டிகாட்டி அவரது தந்தை ரவியிடம் முறையிட்டிருக்கிறார் ஸ்டாலின். இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார் ரவி. விஜயராகவன் வீட்டு தின்னையில் உறங்கிவிட, ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார். பிரச்சினை அத்தோடு முடிந்துவிட்டது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் போதையிலிருந்த ஸ்டாலினுக்கு விஜயராகவன் பேசிய ஒவ்வொரு வார்தையும் நெஞ்சுக்குள் முள்ளாய் தைத்தது.

தூங்கி கொண்டிருந்த விஜயராகவனை எழுப்பி சண்டையிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆளில்லாத அந்த தெருவில் இவர்கள் இருவர் மட்டுமே கட்டி புரண்டு யுத்தம் புரிந்திருக்கிறார்கள். முடிவில், ஹோட்டல் முன்னாள் கிடந்த விறகு கட்டையால் விஜயராகவனை அடித்து கொலை செய்திருக்கிறார் ஸ்டாலின். கொலையை மறைக்க, அங்கிருந்த கால்வாயில் சடலத்தை போட்டு மூடிவிட்டு எதுவும் நடக்காதது போல் சென்றிருக்கிறார்.

அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் விஜயராகவனின் கடைசி நிமிடங்கள் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணையை தொடங்கிய போலீசார் குற்றவாளியை 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்டாலினை சுற்றி வளைத்து விசாரித்த போது நடந்த அத்தனையையும் வாக்கு மூலமாக ஒப்பித்திருக்கிறார். உடனே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்