ஒரே நிகழ்ச்சியில் திமுக,பாஜகவினர்.. மேடையில் இடம் கொடுக்காததால் ஆத்திரம்

x

சென்னை, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டையில் நின்று செல்ல விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் எல். முருகன் விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் பெரும்பாலான நாற்காலிகளில் திமுக நிர்வாகிகளே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகளுக்கு மேடையில் இடம் கிடைக்காததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும், திமுகவினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு நிகழ்ச்சியே பரபரப்பானது.


Next Story

மேலும் செய்திகள்