தாய் மீது ஆத்திரம்...பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத தலைமை ஆசிரியை...ராமநாதபுரம் அருகே பரபரப்பு

x

திருவாடானை அருகே 2 சிறுமிகளை பள்ளிக்கூடத்திற்குள் தலைமை ஆசிரியை அனுமதிக்காத‌தால், காவல்நிலையத்தில் சிறுமிகளின் தாய் புகார் அளித்த‌து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பாகுடியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியை பகவதி சரிவர வராத‌தால் மாவட்ட கல்வித்துறைக்கு புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தபோது, 2 மாணவிகளின் தாயான முருகேஸ்வரி என்பவர் புகார்களை தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளிக்கூடத்திற்கு வந்த இரண்டு சிறுமிகளையும் வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால், குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்ற முருகேஸ்வரி, தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தார். இதையடுத்து, பள்ளிக்கூடத்திற்கு காவல்துறையினரும், தொடர்ந்து வட்டார கல்வி அலுவலரும் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்