ஜூஸ்-ல் மயக்க மருந்து..காதலன் செய்த பகீர் காரியம்..கதறி அழுத காதலி..

x

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள நர்சிங் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியை காண்பதற்காக நாகர்கோயிலில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது, காதலியை அழைத்திருக்கிறார். அங்கு, காதலிக்கு மயக்க மருந்து கலந்த குளிபானம் கொடுத்து, அவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சம்பவமறிந்த பெண் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். இறுதியில், திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலன் சமாதானம் செய்த நிலையில், இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில், பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் இளைஞரின் தந்தை தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞர் சிவக்குமாரையும், அவரது தந்தை பால்ராஜையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்