இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவை சூழ்ந்து கொண்டு நடனமாடிய ரசிகர்கள்

மதுரையில் நடைபெற்ற இசை நகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியாவுடன் ரசிகர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள சூர்யா நகரில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.

இதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்கு நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.

இதில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்ற நிலையில், சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவுடன் ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com