ஆந்திரா காவல்நிலைய பீரோவில் காணாமல் போன 105 கிலோ வெள்ளிநகை! - அதிர்ச்சியில் உறைந்த தமிழக நகை வியாபாரி...

x
  • தமிழகத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளிடம் இருந்து 105 கிலோ வெள்ளி பொருட்களை ஆந்திர போலீசார் கைப்பற்றிய நிலையில், கைப்பற்றப்பட்ட பொருள்கள் மாயமானதாக போலீசார் தெரிவித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • அப்போது தமிழகத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளான மணிகண்டன், சந்தனபாரதி ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 105 கிலோ வெள்ளி பொருட்களையும், 2 லட்ச ரூபாயையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
  • இந்த பொருட்களை போலீசார் கரூவுலத்தில் வைக்கவில்லை என்றும், வருமானவரித் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.
  • அப்போது, கர்னூல் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த விக்ரமசிங்கா நகைகள் மற்றும் பணத்தை காவல்நிலைய பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது.
  • இதன் பின்பு மூன்று காவல் ஆய்வாளர்கள் பணிக்கு வந்து சென்ற நிலையில், இந்த வழக்கில் நகைகளை மணிகண்டன் மற்றும் சந்தனபாரதியிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்நிலையில், தற்போது காவல் ஆய்வாளராக இருக்கும் ராமலிங்கையா, நகைகள் மாயமானதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்