8 வழிச்சாலை விவகாரம்... தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு வந்த‌தா? - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு பதில்

x
  • சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்து விட்டதா? என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
  • மேலும், தமிழக அரசிடம் இருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதேனும் வந்துள்ளதா என்றும் கேட்டிருந்தார்.
  • இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றும், அதே நேரத்தில், தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்