"சினிமாவில் நாங்கள் இல்லை-அரசியலில் கஷ்டப்படுகிறோம்" - அன்புமணி ராமதாஸ் பேச்சு

x

சினிமாவில் இல்லாததால் தான் அரசியலில் முன்னேற கஷ்டப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் நொய்யலை காப்போம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நொய்யல் ஆற்றை பாதுகாக்க விரைவில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு என ஒரு லட்சம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.

தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ள என்எல்சி நிறுவனத்திற்கு எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கொடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

மேலும் வரலாற்றை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்றும், ஆனால் இளைஞர்களிடையே தற்போது நடிகர்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக கூறினார்.

நொய்யல் ஆற்றை பாதுகாக்க விரைவில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சினிமாவில் தாங்கள் இல்லாததால் அரசியலில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்