"அவர் அப்பவே அப்படி.. இப்ப கேட்கவா வேணும்" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய சூர்யா சிவா

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் என்று சூர்யா சிவா கூறியுள்ளார்.

தமிழக பாஜகவில், ஓபிசி பிரிவு மாநில செயலாளராக இருந்த சூர்யா சிவாவுக்கும், சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு, இருவரும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து, சமாதானம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள சூர்யா சிவா, மீண்டும் அவருடைய நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், அண்ணாமலை, கர்நாடக காவல் துறையில் பணியாற்றியபோது, ஒரே காவல் நிலையத்தில் 71 காவலர்கள இடமாற்றம் செய்ததை குறிப்பிட்டுள்ள சூர்யா சிவா, 'அவர் அப்பவே அப்படி... இப்ப கேட்கவா வேண்டும்...' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்