ரஜினி ரசிகர்களே உங்களுக்கு ஒரு அப்டேட் நியூஸ்!

x

நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகிவரும் திரைப்படம் 'ஜெயிலர்'. மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடித்துவிட்டதாகவும், டப்பிங், ரீ ரெக்கார்டிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்