'நிச்சயமற்ற தோற்றம் கொண்ட பழைய உள்ளூர்'... 839 மொழிகள்.. 3வது பெரிய தீவு நாடு - பப்புவா நியூ கினியாவின் அசாத்திய கதை

x


பப்புவா நியூ கினியா எங்கே இருக்கிறது?

ஆஸ்திரேலியாவுக்கு மேலே...உலகின் இரண்டாவது பெரிய தீவு உள்ளது. அதன் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாடுதான் பப்புவா நியூ கினியா.

போர்ட் மோர்ஸ்பி... இதன் தலைநகரம்...

எரிமலை வெடிப்பு, பூகம்பங்கள் மற்றும் பெரிய அலைகளின் அச்சுறுத்தல் இங்கு அதிகம்.

1884 முதல் மூன்று சக்தி வாய்ந்த நாடுகளால் ஆளப்பட்டது பப்புவா நியூ கினியா. இதில் ஆஸ்திரேலியா மட்டும் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது

1975 இல் சுதந்திர நாடாக மாறியது பப்புவா நியூ கினியா.

இங்கே சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்.

பப்புவா நியூ கினியாவின் 80% மக்கள் நவீன வாழ்க்கை வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பார்க்கும் பொழுது.... உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் இதுவும் ஒன்று....

இங்கு வசிக்கும் மக்கள் டிவியை பார்ப்பதை காட்டிலும் ரேடியோவை தான் அதிகம் விரும்பி கேட்கின்றனர்..

இங்கே 839 அறியப்பட்ட மொழிகள் உள்ளன...

இந்த நாட்டில் எரிவாயு தங்கம் மற்றும் காப்பர் அதிக அளவில் கிடைக்கிறது இது ஏழை நாடா அல்லது பணக்கார நாடா என்று கேட்டீர்களாஇன் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று என்றே பப்புவா நியூ கிண்ணியாவை நாம் சொல்ல முடியும்...

இது ஒரு ஜனநாயக நாடு. நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

ஆனால் நாட்டின் தலைவர் என்று வரும்பொழுது எப்படி ஆஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்து அரசர் தான் நாட்டின் தலைவரோ.... அவருடைய பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் இருக்கிறாரோ.... அதேபோன்று பப்புவா நியூ கிண்ணியாவிற்கும் இங்கிலாந்து அரசர் தான் நாட்டின் தலைவர். அரசருடைய பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் இருக்கிறார்

பப்புவா நியூ கிண்ணியாவில் சுமார் 3,000 இந்தியர்கள் வசிக்கின்றனர் இதில் சுமார் 2000 பேர் இயற்கை எரிவாயு துறையில் பணிபுரிகின்றனர் மற்றவர்கள் கணக்காளர்களாக பேராசிரியர்களாக மருத்துவர்கள் ஆக ஐடி துறை வல்லுனர்களாக மற்றும் அரசாங்கத்திலும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்