டிராகன் தேசத்தை பதம் பார்க்கும் பழைய பகையாளி - அதிபருக்கு எதிராக திரும்பிய சீனர்கள்

x

சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்கார‌ர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பதிவாகி வருவதால், பெய்ஜிங், ஷாங்காய், வூகான் உட்பட பல்வேறு நகரங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக பதாகைகளை வைத்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரையும், வெள்ளை அட்டைகளுடன் செல்வோரையும் போலீசார் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்