இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ்... இளைஞரை காலணியால் விளாசிய இளம்பெண் - வெளியான பரபரப்பு வீடியோ

இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை, பெண் ஒருவர், தனது காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி பகுதியில் உள்ள தேநீர் கடை ஒன்றில், கல்யாண் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர், கல்யாணை திடீரென தான் அணிந்திருந்த காலணியால் தாக்கத் தொடங்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றபோது, நடந்ததை கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், கல்யாணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com