சுவாரஸ்யம் நிறைந்த குரோஷியா நாட்டுக்கு பயணம்... ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...

x

ஊரு விட்டு டூரு வந்து பகுதியில இன்னைக்கு நாம இறங்கி அலச போற இடம் குரோசியா...!

தென் ஐரோப்பாவுல பால்கான் பகுதியில இருக்ற ஒரு குட்டி நாடு தான் இந்த குரோசியா...

வழக்கம் போல எந்த ஊருக்குப் போனாலும் அதோட எஸ்டிடிய கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு போகனும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருகாங்க... அதனால குரோசியாவ வேர்ல்ட் மேப்ல வட்டம் போட்டு காட்டுற சில வாவ் ஃபேக்ட்ஸ்ச பத்தி லைட்டா தெரிஞ்சுக்கலாம் வாங்க...

விதை போட்ட குரோஷியா...

ஸ்கூல் பசங்கல்ல இருந்து, பிஸ்னஸ் மேன் வரைக்கும் இன்னைக்கு தன்னை ரிச்சுனு காட்டிகறதுக்கு அடையாள மாறி இருக்குறதே இந்த டை தான்.... (neck dies).

இந்த கருத்த இங்க எதுக்கு சொல்ல வரேன்னா... இன்னைக்கு உலகம் முழுக்க பல வகையான டைகள் இருந்தாலும்..., அதுக்குலாம் வித போட்டது இந்த குரோசியாகாரங்க தானாம்..

நாய்களின் தாய்நாடு...

பிளாக்கன் ஒயிட்ல பெயின்ட் அடுச்சு விட்ட மாதிரி சுத்திக்கிட்டு இருக்க dalmatian நாய்கள தெரியாதவங்களே இருக்க முடியாது... அந்த அழகு செல்ல குட்டியோட சொந்த ஊரே இந்த Croatia தான்....

இந்த நாடு கடற்கரைய ஒட்டி அமைஞ்சிருக்குறதுனால , கிட்டத்தட்ட 1200 குட்டி தீவுகள் இந்த நாட்ட சுத்தி இருக்காம்... பட் அதுல 67 தீவு மட்டும் தான் மக்கள் வாழக்கூடிய பகுதியா இருக்கு...

ஊர பத்தி ஓவரா பில்டப் விடரானே தவிர ஊர சுத்திக்காட்ட மாட்டேங்குறானேனு... நீங்க யோசிக்கிறது எனக்கு நல்லாவே புரியுது, அதுனால சட்டு புட்டுனு ஊருக்குள்ள நுழைஞ்சு அலப்பறை குடுக்க ஆரம்பிக்கலாம் வாங்க.

குரேசியாக்குள்ள நுழைஞ்சதுமே முதல்ல நம்மல ஆச்சரியப்படுத்துனது மட்டுமில்லாம, நாம கரெக்டானா இடத்துக்கு தான் வந்திருக்கோமானு கொஞ்சம் கன்ஃயூஸ் பண்ண வச்சுருச்சு இந்த ஸ்பாட்....

பெருஞ்சுவரின் மினி ஜெராக்ஸ்...

ஊரையே காக்கும் பிரம்மாண்ட அரண்...

சீனப் பெருஞ்சுவர அப்படியே மினி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்க இது தான் wall of ston...

டால்மேசியாங்குற கிராமம் இந்த நாட்டு அரசருக்கு சொந்தமா இருந்திருக்குது... அந்த டைம்ல எதிரிகள் உள்ள வராம இருக்க... அப்பவே கிராமத்துக்கு பாதுகாப்பு அரனா 7 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த மதில் சுவர கட்டி இருகாங்க.... ஒவ்வரு வீட்டுக்கும் தனி தனியா காம்பவுண்ட் வால் கட்டுறதுக்கு பதிலா... மொத்த ஊருக்கும் சேர்த்து காம்பவுண்ட் வால் கட்டினதால இன்னைக்கு இந்த இடம் இவ்வளோ பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறி இருக்கு...

மதில் சுவர சுத்தி பாத்துக்கே அசந்துட்டா எப்படி, அடுத்ததா ஒரு பிரம்மாண்ட அரண்மனையே நமக்காக காத்துகிட்டு இருக்கு... வாங்க அங்க போய் அட்டன்டென்ஸ்ச போடலாம்...

பொறாமை கொள்ளும் பேரழகு.!

குரோசியா நாட்டுல இருக்குறதுலயே ரொம்பவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிட்டினா அது ஸ்பிளிட் சிட்டி தான்... ஒரு காலத்துல ரோமானியர்களோட கட்டுபாட்டுல ஸ்பிளிட் சிட்டி இருந்தப்போ ஒரு ரோம் மண்னரால கட்டபட்டது தான் இந்த Palace of Diocletian...

அடுத்து இங்க இருந்து ஒரு யூட்டர்ன போட்டு... Dubrovnik சிட்டிக்குள்ள வந்ததும் நம்ம கண்ணுல பட்டது தான் இந்த வினோத கட்டிடம்...

என்னடா இது அந்த காலத்து வீட்டுல இருக்ற புறா கூடு மாதிரி இருக்குதேனு விசாரிச்சா, நம்மல அசர வைக்குற அளவுக்கு ஒரு சூப்பர் மேட்டர் சொல்றாங்க....

ஒரு வேல நீங்க வெப் சீரியஸ் ரசிகரா இருந்தா இன்னேரம் இந்த எடத்த கண்டு புடிச்சுருப்பீங்க..

ஆமாங்க நீங்க கெஸ் பன்னது சரி தான்... உலக அளவுல ட்ரென்ட்டா இருந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ்ச இங்க தான் எடுத்திருக்காங்க.

13 ஆம் நூற்றாண்டுல உருவான இந்த பழமையான நகரம்... சுனாமி, நில நடுக்கம் மாதிரியான இயற்கை சீற்றங்களாலும், போர்களாலும் மிகப்பெரிய சேதத்தை சந்திச்சதா சொல்றாங்க. ஆனா அப்படி இருந்தும் இந்த கட்டிடம் கெத்தா நின்னுருக்கு.அட என்னப்பா இவ்வளோ பெரிய கடல முன்னாடி வச்சுக்கிட்டு வெறும் கட்டடத்த மட்டும் காட்டிக்கிடு இருக்கிறியேனு.... நீங்க ஃபீல் பண்றது எனக்கு புரியுது....

படையெடுக்கும் கண்ணாடி கடல்...

சரி... மக்கள் கூட்டம் படையெடுக்குற Zlatni Rat Golden Beach-க்கு உடனே கிளம்பலாம் வாங்க...

குரோசியா முழுக்க எத்தனையோ பீச் இருந்தாலும் வெரும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்குற இந்த பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் தேடி வரதுக்கு காரணம்... கண்ணாடி மாதிரி சும்மா பள பளனு இருக்க இதோட அமைப்பு தான்...

வழக்காமா கடல் தண்ணிதான் வழிஞ்சு நிலத்துக்குல்ல வரும்... ஆனா இந்த பீச்சுல கரை வழிஞ்சி கடலுக்குல்ல போறமாதிரி இருக்குமாம்.

மாற்றும் வினோத கடல்...

ஆனா... இந்த அதிசயமான shape ஆ பாக்கனும்னா உங்களுக்கு அதிஷ்டம் இருக்கனுமாம். ஏன்னா குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை... இந்த பீச் தன்னோட வடிவத்த மாத்திட்டே இருக்குமாம்.

மிதக்கும் வாட்டர் பார்க்...

கடல் தண்ணிய பாத்ததும் நமக்கும் ஆட்டம் போட தோனுதுல... சரி டைம் வேஸ்ட் பண்ணாமா, இங்க இருக்ற மிதக்கும் பார்க்கல ஒரு ஆட்டத்தை போடலாம் வாங்க....

போதும்.. போதும்.. தண்ணில இறங்கிட்டா வெளிய வர மனசே இல்லாம... சின்ன புள்ள மாதிரி ஆட்டம் போட்டுகிட்டே இருப்பீங்கனு தெரியும்... ஆனா நாம அடுத்த இடத்துக்கு போற நேரம் வந்துருச்சு சீக்கிரம் கிளம்புங்க...'

என்ன தான் கடலுக்கு மேல நாம ஜாலியா ஆட்டம் போட்டாலும்... கடலுக்கு உள்ள இருக்குற இன்னொரு உலகம் நம்மல ஆச்சரியப்பட வைக்குது...

நம்ம ஊர்ல பிக்னிக்னாலே... கிண்டி பார்க்குக்கும், வண்டலூர் ஜூக்கும் புளியோதரை கட்டிகிட்டு போற மாதிரி... இந்த ஊர்ல பிக்னிக் போறதுக்கு ஏத்த இடம்னா அது இந்த தான்...

ஜெல்லி ஃபிஸ், கடல் குதிரை, ஆக்டோபஸ்னு... அன்டர் வாட்டர் அனிமல்ஸ் அத்தனையும் இங்க தான் குடித்தனம் பண்றாங்க...

எண்டர்டைமென்டுக்கு பஞ்சமே இல்லாத இந்த குரோசியா... அட்வஞ்சர்க்கும் குறை வைக்கலனு தான் சொல்லனும்...

ஏனா அதிக நிலப்பரப்பு காடுகலா இருக்குற குரேசியாவுல எக்கச்சக்கமான பார்க்குகள் இருக்குது... அதுல முக்கியமானது தான் இந்த PLITVICE NATINONAL PARK

Kayaking பண்ணனும் ஆசபடுறவங்க Kayaking பண்ணலாம்...

பறக்குறோம்.... இன்னைக்கு பறந்தே ஆகுனும்னு அடம் பிடிக்றவங்க zip lining பண்ணலாம்...

இப்படி ஏகப்பட்ட விசயங்கள் இங்க குவிஞ்சு கிடக்கு...

தோல்விக்கு மியூசியமா?

மியூசியம்னாலே... பழைய தட்டு முட்டு சாமான்... எலும்பு கூடும் இத தான் வச்சுருப்பாங்க... ஆனா இங்க லைஃப்ல தோத்துப் போனவங்களுக்காகவும், வாழ்க்கை துணைய இழந்தவங்களுக்காகவும் ஒரு மியூசியம் வச்சுருகாங்க.

அதாவது தன்னோட காதலிக்கு முதல் முதலா வாங்கிக் கொடுத்த கிஃப்ட் , தன்னோட மணைவி யூஸ் பண்ண பொருட்கள் அப்படினு.. எதெல்லாம் பிரிஞ்சு போன காதலர்களை நினைவு படுத்துமோ... அதை எல்லாம் இங்க கொண்டு வந்து வச்சுருவாங்களாம்.. இது மட்டுமில்லைங்க... அதுக்கு பக்கத்துலயே அந்த பொருள் பத்தின தன்னோட நிஞாபகங்களையும் எழுதி வச்சிட்டா, அது காலத்துக்கும் அழியாம பாதுகாக்கப்படும்.

என்ன தான் இந்த ஊர்ல மக்கள் கொஞ்சமா இருந்தாலும்... இவங்க அத்தனை பேரையும் ஒரே இடத்துல ஒன்னா கூட வைக்குறதே இங்க நடக்குற திருவிழா தான்... அதனால அதையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம் வாங்க.

மேக்கப்பில் கலக்கல் ஊர்வலம்...

ஆண்கள்... பெண்கள்னு அம்புட்டு பேரும்... வித்தியாசமா மேக்கப் போட்டுக்கிட்டு வீதியில உலா வர இந்த திருவிழா பேரு தான் rijeka carnival.

பாட்டு... டான்ஸுனு ஒட்டு மொத்த சிட்டியும் குலுங்குறமாதிரி ஜாலியா எஞ்சாய் பண்றது தான் இந்த திருவிழாவோட ஸ்பெசல்லே.

போட வைக்கும் இசை திருவிழா...

வித விதமா ட்ரெஸ் போட்டு வீதில நடக்குறதவிட, அடிக்குற அடியில காது ஜவ்வு கிழியனும்டானு சொல்ற மாதிரி, இந்த ஊரு இளந்தாரி பயலுவலுக்கு புடிச்ச ஒரு ஃபெஸ்டிவல்னா அது ultra europe தான்..

ஆட்டம் பட்டம்னு அமர்களமா தான்யா போய்க்கிட்டு இருந்துச்சு அதுக்குள்ள எங்கயா... வாள எடுத்துட்டு கிளம்பிட்டாங்க... இன்னைக்கு எத்தன தலை உருல போகுதோ அப்படினு தப்புகனக்கு போட்றாதீங்க.

இது தான் இந்த ஊரோட பாரம்பரிய நடனங்கள ஒன்னா இருக்க sword dance festival...

பாக்குறதுக்கு நம்ம ஊரு கோலாட்டம் மாதிரி இருந்தாலும்... இந்த வாளாட்டத்திற்கு பின்னாடி ஒரு வரலாறு இருக்குனு சொல்றாங்க..

அதாவது ஒரு காலத்துல அன்ணிய நாடுகள் குரோசிய பகுதிகல ஆக்கிரமிப்பு செஞ்சப்போ, அதை எதிர்த்து பலர் உயிர குடுத்து போராடியிருக்காங்க... அப்போ நடந்த போர்கள நினைவு படுத்துறவிதமா தான்... இந்த வாளாட்டத்த வருசா வருசம் ஜூன் மாசத்துல நடத்துறாங்களாம்.

சரி... ரொம்ப நேரம்... ஊரையும்.... திருவிழாவையும் சுத்தி பாத்து டயார்ட் ஆகிட்டோம்... அதுனால... இந்த ஊர் சாப்பாட்ட ஒரு புடி புடிச்சு எனர்ஜிய ஏத்திக்கலாம் வாங்க...

நம்ம வீட்டு தெரு முக்குல... எப்பவுமே பஜ்ஜி... போண்டா கிடைக்குற மாதிரி... இந்த ஊர் தெரு முக்குல எப்பவுமே சுட சட கிடைக்குற ஃபுட்னா... அது fritule தான்...

பெரிய பசிய கூட பொருத்துக்கலாம்... ஆனா இந்த சின்ன பசிய பொருத்துக்கவே முடியாது... அதுக்கு ஏத்த சரியான தீர்வு இந்த Kulen sausage...

கார சாரமா சாப்பிட்ட நம்ம நாக்கை சாந்தப்படுத்த Rozata -வ ஒரு புடி புடிங்க சும்மா வேற லெவல்ல இருக்கும்...

ஈவ்னிங் ஸ்னாக்கு trukli தான் நல்ல சாய்ஸ்...

நம்மளாம் ஆக்டோபஸ்ஸ பாத்தா ரசிப்போம்... ஆனா இவங்க வெட்டி குழம்பு வச்சு ருசிக்குறாங்க... கேட்டா இதுக்கு பேர் தான் Black risotto வாம்...

ஹ்ம்ம் எனக்கு வேண்டாம் உங்கள்ல யாராச்சும் விருப்பபட்டீங்கனா சாப்டுங்க...

ஊரா இருந்தாலும் சரி... சோரா இருந்தாலும்... குறையே இல்லாம கண்ணுக்கும் வயித்துக்கு விருந்து வச்ச இந்த Croatia நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் சலிக்காதுனே சொல்லலாம்... சோ... முடிஞ்சா நீங்களும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க மக்களே...


Next Story

மேலும் செய்திகள்