மாத்திரை கொடுத்த சிறிது நேரத்தில் நிற்காமல் ஆடிய கைக்குழந்தையின் கை, கால்கள்... அரசு மருத்துவமனையில் பரபரப்பு

x

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தவறான மாத்திரை வழங்கப்பட்டதால், குழந்தையின் கை, கால்கள் நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் - சிந்துக்கு இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போட்டுள்ளனர். தடுப்பு ஊசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால், குழந்தைக்கு கொடுக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரையை குழந்தைக்கு கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தையின் கை, கால்கள் நிற்காமல் ஆட தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பச்சிளம் குழந்தையை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்த‌தில் காய்ச்சல் மாத்திரைக்கு பதிலாக குழந்தைக்கு சளி மாத்திரை வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், அரசு மருத்துமனையில் மாத்திரை தவறுதலாக வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்