தங்கம் என நினைத்து டம்மி வளையலுக்கு ரூ.81,000 கொடுத்து ஏமாந்த ஊழியர்

x

சென்னை வியாசர்பாடியில், தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வலையல்களை அடகு வைத்து, 81 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நகைக்கடையில், சங்கர் ராஜ் என்பவர் தங்க வளையல்களை அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளார். வளையல்களைப் பார்த்ததும் ஒரிஜினல் தங்க வளையல்கள் போல இருந்ததால், அதனை எடை போட்ட கடை ஊழியர்கள், 81 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். அந்த இரண்டு வயல்களையும், தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க வளையல்கள் என தெரியவந்தது. இதுகுறித்து ஜீவானந்தம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்