ஓடும் ரயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி.. வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

உத்தரப்பிரதேசத்தில், ரயிலில் சென்ற 70 வயது முதியவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரது மனைவி சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றினார். டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயில், மதுரா அருகே சென்ற போது, கேசவன் என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மனைவி தயா தகவல் அளித்த‌தால், ரயிலை போலீசார் நிறுத்தினர். போலீசார் அறிவுறுத்தல்படி, 10 நிமிடம் சிபிஆர் முதலுதவியை வாயோடு வாய் வைத்து தயா அளித்தார். இதையடுத்து சீராக மூச்சு விட்ட முதியவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய போலீசாருக்கு தயா நன்றி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com