மாணவர்களுக்காக மணற்கேணி செயலி...இனிமே அது ரொம்ப ஈஸி

x

தாம்பரம் அடுத்த சேலையூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில்மகேஷ்

செயலியை துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மாதிரிபள்ளிகள் சங்க உறுப்பினர் சுதன், உட்பட கல்வித் துறையின் உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த செயலி மூலம் மாணவர்கள் எந்த பாடத்தையும் விட்டுவிடாமல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வசதி செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். கற்றல் செயல்பாட்டை மிக மகிழ்ச்சிகரமாக்கும் இந்த செயலி இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்