ஆற்றில் விழுந்த 80 வயது முதியவர்... களத்தில் இறங்கி கண்டுபிடித்த போலீஸ் நாய்...நெகிழ்ச்சி சம்பவம்

x

காணாமல் போன முதியவரை காவல்துறை நாய் ஒன்று கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் காட்டில் வேட்டைக்கு சென்ற போது 80 வயதான முதியவர் ஆற்றில் தவறி விழுந்தார். இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், களத்தில் இறங்கிய கே9-லோகி என்ற போலீஸ் நாய் வெற்றிகரமாக முதியவரைக் கண்டுபிடித்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்