அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - கையில் மனுவோடு கோரிக்கை வைத்த பெண்கள்

x

கிருஷ்ணகிரியில் சந்தைப்பேட்டை மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.‌ இந்த இரு அம்மா உணவகங்களிலும் மொத்தம் 24 பேர் பணி புரிகின்றனர். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், 12 பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என அறிவுறுத்தியதாகவும் திடீர் என பணியை விட்டு நீக்கினால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுந்தரம்மாள் நகராட்சிகளில் அம்மா உணவகங்களின் செலவினத்தை குறைப்பதற்காக ஆட்களை குறைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்