அமெரிக்காவின் கலக்கலான சுற்றுலா நகரம்... மியாமி நகருக்கு ஜம்முனு ஒரு பயணம்...

x

மியாமி...

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் கலக்கலான கடற்கரை நகரம் தான் இந்த மியாமி சிட்டி...

அமெரிக்காவுலேயே மிக உயரமான கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் எதுனு கேட்டா... அதுல தேர்டு பிளேஸ் மியாமிக்கு சிட்டிக்கு தான்... நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன்னு பெரிய பெரிய சிட்டிகளுக்கு மத்தில இந்தச் சின்ன சிட்டி போட்டி போடுதுனா... அதுக்கு காரணம் இங்க இருக்குற தொழில் வளர்ச்சியும்! சுற்றுலா தளங்களும் தான் காரணம்...

சரி... ஊர் பெருமையையே பேசாம... ஊருக்குள்ள இறங்கி அலப்பறை குடுக்க ஆரம்பிக்கலாம் வாங்க...

யம்மாடியோவ்... Miami சிட்டியை கழுகு பார்வையில் தரிசிக்கும்போதே நம்மை தண்ணீரில் ஆட்டம் போட கீழே இறங்க வைக்குது இந்த கடற்கரை....

குளியல் போட சூப்பர் ஸ்பாட்...

பச்சை நிற கடல், வெள்ளை நிற மணல் என சுற்றுலாவாசிகள் சூரியக் குளியல் போடுவதற்கு வேற லெவல் ஸ்பாட்டாக இருக்கிறதுனாலயும்.... கடல் தண்ணிக்கு நடுவுல பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல்கள் இருக்கிறதுனாலயும்... சுற்றுலாவாசிகள் படையெடுக்குற முக்கிய இடமா திகழுது இந்த இடம்...

இந்த ஹோட்டல்களை பார்த்தாலே நம்ம பர்ஸ் காலியாகிவிடும் போல… அதனால நம்ம பட்ஜெட் லெவலுக்கு ஏத்தமாதிரி கடற்கரை ஓரத்தில இந்த குட்டி குட்டி கடைகள்ல... குட்டி ஷாப்பிங் பண்ணலாம் வாங்க !

மியாமி நகரின் முக்கியமான ஸ்பெஷல் என்னனா ? உலகப் புகழ் பெற்ற சில முக்கியமான துறைமுகங்கள் மியாமி நகரத்துல இருக்குறதுனால... கப்பல் போக்குவரத்து வளர்ச்சியடைஞ்சு... உலகின் கப்பல் தலைநகரம்னு பெருமையோடு அழைக்கப்படுது இந்த குட்டி சிட்டி!

நம்ம ஊர்ல பைக்க எடுத்துகிட்டு... வினோதமா காஸ்ட்யூம் போட்டுகிட்டு திரியுற புள்ளைங்கோ மாதிரி...

"கும்பலாக சுத்துவோம்... நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்னு" காரை எடுத்துகிட்டு ஊரையே வலம் வராங்க இந்த ஊர் புள்ளைங்கோ கோஷ்ட்டி...

கேட்டா இதுக்கு பேரு ஏதோ ocean drive-வாம்...! சும்மா ஒரு நாள் கூத்தா இருக்குமோனு நெனச்சா.... டெய்லியும் ராத்திரி, பகல்னு திருவிழா மாதிரி களைகட்டுது பீச்சு ரோடு....

நல்லாருக்கே சரி வாங்க நாமளும் ஆட்டத்தை போட்டுட்டு வரலாம்...

Miami சிட்டியில் அடுத்து நாம் செல்ல இருக்கும் இடம் bayfront park…

இந்த இடத்தோட சிறப்பம்சமே இங்கு நடக்குற இசைக் கச்சேரி தான்… விடிய விடிய நடக்கும் இந்த கச்சேரியை ரசிக்க... ஆட்டம்... பாட்டம்னு... கூட்டம் சும்மா குவிஞ்சுடும் குவிஞ்சு!

ஹலோ... ஏங்க... நாங்களும் இங்க தான இருக்கோம்... எங்களையும் பார்க்க வரலாம்லேனு… ஜாடையாக Miami zoo க்கு கூப்டுதுங்க இங்க இருக்க வன விலங்குகள்...

சரி வாங்க, அவங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... அப்புறம் அரி கொம்பன் மாதிரி ஊருக்குள்ள நுழைஞ்சு பிரச்சனை பண்ன போறாங்க...

Miami zooல புலி, யானை, ஒட்டக சிவிங்கினு எல்லாம் இருந்தாலும் குழந்தைகளும்... பெரியவர்களும்.... ஆர்வமாக பாக்க வரது என்னவோ... இந்த முதலை கண்காட்சிக்குத்தான்...

இது மட்டுமா... தைரியம் இருக்குறவங்க முதலையோட உட்கார்ந்து கொஞ்ச நேரம் கொஞ்சி கொஞ்சி கதை பேசிவிட்டும் வரலாம்…

Miami சிட்டியில அடுத்து நாம கால் பதிக்கும் இடம் jungle island...

இந்த நகரத்தில் பொழுது போக்கிற்கு பெயர் போன நம்பர் ஒன் இடம் இதுதானாம்.... உள்ளே நுழைஞ்சதும்... பல வகையான கிளிகளெல்லாம் நம்மை கொஞ்சி குலாவியே டயர்ட் ஆக்கிடும்!

ஓவியங்கள் நிறைந்த கலர்ஃபுல் சுவர்...

பொதுவா நம்மளாம் பசங்களா இருந்த பொண்ணுங்களோட சேந்து செல்ஃபி எடுப்போம்... பொண்ணுங்கலா இருந்தா பசங்களோட செல்ஃபி எடுப்போம்... ஆனா இந்த wynwood wall க்கு போனா நாம ஆட்டோமெட்டிக்கா செல் போனை எடுத்து நம்மல நாமலே செல்பி எடுக்க ஆரம்பிச்சுடுவோம்… அப்படி ஒரு சக்தி கலர்ஃபுல் சுவர் ஓவியங்கள் நிரம்பிய wynwood wall-க்கு உண்டு...

கொண்டாட்டங்கள் நிறைந்த மியாமி நகரம், சில விநோத திருவிழாக்களுக்கும் பெயர் போனதாக இருக்கு. அதுல ஒன்னு தான் Fiddler Crab Festival. கடற்கரையில் சும்மா திரியும் நண்டுகளைப் பிடித்து சமைத்து சாப்பிடுவது, ரேஸ் விடுறதுனு சும்மா கூட்டம் களை கட்டும்.

ஐஸ்கிரீமை ருசிக்க பிரத்யேக மியூசியம்...

பெரும்பாலும் குழந்தைகளாம் மியூசியங்களை விரும்பவே மாட்டாங்க... இவளோ ஏன்... பெரியவங்க சிலருக்கே அது போர் அடிக்கும்... ஆனால், இந்த மியூசியம் அப்படிலாம் போர் அடிக்காது... ஏனா இங்கே வர குழந்தைகள் மியூசியம் குள்ள நுழைய க்யூ கட்டி நிக்குறாங்க.... அப்படி என்ன மியூசியமா இருக்குனும் யோசிக்கிறீங்களா...? அது தான் Miami Museum of Ice Cream...

ஷாப்பிங்கைப் பொறுத்தவரை மியாமி நகரத்து டி.நகர் சொன்னா அதுதான் bayside market...

ஆடை, உணவு, அலங்காரப் பொருட்கள்னு நம்ம பட்ஜெட்டுக்கு செலவு செய்ய ஏற்ற இடம் தான் இந்த ஷாப்பிங் மார்க்கெட்...

இங்க இன்னொரு ஹைலைட் என்னனா.... படகுகளை கூட மார்கெட் கடையாக மாத்தி வியாபாரம் பண்ணிட்டு வராங்க...

சரி சரி வாங்க... அப்படியே இந்த jet ski போட்டை வாடகைக்கு எடுத்து ஜாலியாக ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்...

அமெரிக்காவின் மிக பிரபலமான விளையாட்டுகளில் ஒன்னு ரக்பி கேம்....'

அந்த விளையாட்டுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரிய மைதானமான hard rock stadium இங்க தான் இருக்கு...

அட, இந்த ஸ்டேடியம் நம்ம ஷோவுக்கு ஒண்ணும் புதுசு இல்ல… சில வாரங்களுக்கு முன்னாடி காட்சி தீ பகுதியில ஒரு பூனை தற்கொலை பண்ணிக்க பாத்துச்சே... அது இங்க தான்...

பழனி போனவங்களுக்கு பஞ்சாமிர்தத்தோட சேத்து... திருப்பதி லட்டு தந்தா எப்டி இருக்கும்... அதுமாதிரி மியாமில சுற்றுலாவாசிகளுக்கு கிடைச்ச திருப்பதி லட்டு தான் இந்த seaplane tour...

அதாவது தண்ணில மிதந்துகிட்டே கடலின் அழகையும்... பறந்துகிட்டே ஒட்டு மொத்த ஊரின் ரம்மியத்தையும் ஒரே நேரத்தில் ரசிக்க உதவுது இந்த seaplane tour...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கானு சொல்லுவாங்களே அது இது தான் போல...

இன்னும் சிலருக்கு ஹெலிகாப்டர்ல ஊரைச் சுத்தி பாக்கனும்னு ஆசை ஆசை வரும்.... அந்த ஆசையையும் தீர்த்து வைக்கிறது இந்த ஊர் அரசாங்கம்….

மனசு தில் இருக்குறவங்க இந்த ஸ்கை டைவிங்க ட்ரை பண்ணி பாருங்க... தில் இல்லாதவங்க என்ன மாதிரி ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க.

டால்பினை வைச்சி சர்க்கஸ் நடத்துறவங்களை பாத்துருப்போம். ஆனா, திமிங்களத்தையே வைத்து சர்க்கஸ் நடத்தும் வித்தைகாரங்களாம் மியாமியில்தான் இருப்பாங்க போல... அதுக்கு சாம்பில் தான் இந்த Miami Sea aquarium.

இதே இடத்தில் சுற்றுலா வாசிகளைக் கவர under water கண்காட்சியும் இருக்கு... விருப்பபடுறவங்க முகத்துல ஆக்சிஜனை மாட்டிகிட்டு தண்ணிக்குள்ள இறங்குனீங்கனா ஒவ்வொரு மீனையும் தொட்டு பாத்து ரசிச்சிட்டு வரலாம்….

Miami கடற்கறை நகரங்குறதுனால முடிஞ்ச வரை தண்ணில ஆட்டம் போட கண்டிப்பாக நம் கண்கள் தீம் பார்க்கை தேடும்.... அதுனால அந்தக் குறையை தீர்த்து வைக்குறதுக்காகவே இருக்கு Tidal Cove Water Park...

குறிப்பாக இந்த ஊரோட ரயில்வே சேவை ஒன்றரை நூற்றாண்டுகளை தாண்டி இன்னும் ஓடிக்கிட்டு இருக்கிறதுனால... அப்போ யூஸ் பண்ண பழங்கால ரயில் எஞ்சின்களை இன்னைக்கும் புதுப்பிச்சு பாதுகாத்து வருகிறது Gold Coast Railroad Museum

சரி... ரொம்ப நேரமா ஊரை சுத்தி பாத்து டயார்ட் ஆகிட்டோம் அதுனால... Miami நகரத்து உணவுகளை சாப்பிட கிளம்பலாம் வாங்க!

Miami-யின் தெருவோர உணவுகள்ல முக்கிய அங்கம் வகிக்கிறது, உருளை கிழங்கையும் பன்னையும் வைத்து தயாராகும் frita cubana.

மிட்டாய்களை தூவி விட்டு காற்றடித்த பலூன் போல் ரெடியாகிறது smash donut

அட நம்ம ஊரு ரொட்டி கிழங்கு இங்கயும் ஃபேமஸாம்… ஆனால்

கிழங்குக்கு பதிலா சிக்கன வைச்சி தராங்க...

வெள்ளை மீசை முளைத்தது போல் நம்மை சாப்பிட வைக்கும், மயோனீஸ் ஊற்றிய donar kebab...

நாம சாப்பாட்டு ராமனானாலும் சரி... கொண்டாட்டம் தேடும் கிருஷ்ணனானாலும் சரி... எல்லாத்துக்கும் வெயிட்டாக தீனி போடும் நகரமான மியாமிக்கு எத்தனை முறை வந்தாலும் சலிக்காதுனே சொல்லலாம்...



Next Story

மேலும் செய்திகள்