ஆஹா...! பயங்கரமான நியூ இயர் பயணம்...ஆட்டோ வைத்து மாஸ் பிளான் - தமிழகம் வந்த அமெரிக்க சகோதரர்கள்

x

ஆஹா...! பயங்கரமான நியூ இயர் பயணம்...ஆட்டோ வைத்து மாஸ் பிளான் - தமிழகம் வந்த அமெரிக்க சகோதரர்கள்

தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க சகோதரர்கள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மாமல்லபுரத்திற்கு ஆட்டோவில் வந்த அமெரிக்க

சகோதரர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களை ஆட்டோ மூலம் சென்று சுற்றி பார்க்க உள்ளதாகவும் புத்தாண்டை மதுரையில் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க சகோதரர்கள் தெரிவித்தனர். தம்பியான டைலர் ஆட்டோ ஓட்ட அண்ணன் பிரைஸ் சீட்டில் அமர்ந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு

புறப்பட்டு சென்றனர். சாலையோர உணவகங்களில் சாப்பிட்டு ஆட்டோவில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று திருமணம் ஆகாத அந்த அமெரிக்க சகோதரர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்