"அம்மாடி இவ்ளோ பெரிய பாதம்-ஆ.."உலகில் மிக நீள பாதம் கொண்ட பெண்

x

அமெரிக்காவை சேர்ந்த டான்யா என்ற பெண், உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் கொண்ட அந்த பெண் உலகிலேயே உயரமான பெண்ணை விட மூன்று இன்ச் தான் உயரம் குறைவானவர். இந்நிலையில், இவரது வலது பாதம் 13 புள்ளி 3 இன்ச் உயரமும், இடது பாதம் 12 புள்ளி 79 இன்ச் உயரமும் கொண்டுள்ளது. தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே அதிக உயரம் கொண்டவர்கள் என்பாதால் மரபு ரீதியாக தாமும் உயரமாக பிறந்துவிட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்