"அம்பேத்கரின் உரைகளை கட்டாயம் படிக்க வேண்டும்"..நாட்டு மக்களுக்கு மோகன் பகவத் வலியுறுத்தல்

x
  • அம்பேத்கரின் நாடாளுமன்ற உரைகளை மக்கள் கட்டாயம் படிக்க வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அம்பேத்கரின் உரைகள் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள உதவுவதாக தெரிவித்தார்.
  • நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டங்களை வெளியிட்டபோது, அம்பேத்கர் இரண்டு உரைகளை நிகழ்த்தியதாக தெரிவித்த அவர், அந்த உரையை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 மற்றும் டிசம்பர் 6ம் தேதி படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
  • மேலும் அம்பேத்கரின் உரையை மேற்கோள் காட்டி பேசிய மோகன் பகவத், வேறுபாடுகள் மற்றும் உட்பூசல்களால் நாடு அந்நிய சக்திகளின் கைகளுக்கு சென்றதாக குறிப்பிட்டு, நாம் சரியான பாதையில் பயணிக்கிறோமா? என்பதை அறிய அம்பேத்கரின் பேச்சு வழிகாட்டியாக இருக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்