அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தகராறு போலீஸ் மீது கல் எறிந்து தாக்குதல் - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

தேனி, பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளின் போது ஏற்பட்ட தகராறில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பகுதியை தீவிர கட்டுபாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்...

https://youtu.be/NHJJo_4cVp0பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரியே தகராறு ஏற்படவே, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, காவலர்கள் மீதும், காவல்நிலையம் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 15 காவலர்கள் பலத்த காயமடைந்த நிலையில், 70 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்ட நிலையில், பகுதி முழுவதும் தங்களின் கட்டுபாட்டில் கொண்டுவந்துள்ள போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்