சர்ச்சையை கிளப்பிய "அம்பேத்கரும் மோடியும்" - புத்தக விழாவில் இசைஞானி இளையராஜா

x

அம்பேத்கரும் மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கிறார்.

BLUEKRAFT டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற நிறுவனம் தயாரித்த அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தில் அணிந்துரை எழுதிய இளையராஜா, மோடி ஆட்சியை பார்த்து அம்பேத்கரே பெருமைப்பட்டிருப்பார் என குறிப்பிட்டது சர்ச்சையானது.

இதற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பியாக இளையராஜா பதவியேற்றார்.

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் அம்பேத்கரும், மோடியும் புத்தக வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்