தொடங்கிய அமேசான் 'PRIME DAY'.. வாடிக்கையாளர்களே உஷார்..!இதில் சிக்கிடாதீங்க..பார்த்து வாங்குங்க..

x

அமேசான் உள்ளிட்ட தளங்களில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இணைய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இ-காமர்ஸ் தளமான அமேசானில், இன்றும் நாளையும் PRIME DAY விற்பனை நடைபெறுகிறது. இதன்மூலம், செல்போன், டிவி உள்ளிட்ட பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேசமயம், கடந்த காலங்களில் ஆப்பிள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, இ-காமர்ஸ் தளங்களில் வாங்கிய போது, போலியான அல்லது தவறான பொருட்கள் அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக புகார் அளித்தும், அமேசான் உள்ளிட்ட தளங்கள் உதவவில்லை என்றும், பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக புகார்களை பதிவு செய்துள்ளனர். எனவே, விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் போது, அதனை டெலிவரி செய்பவர் மூலமாகவே, முழுவதுமாக பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இணைய வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதுதவிர, சம்மந்தப்பட்ட பொருள் மீதான சமீபத்திய ரிவியூக்கள் மூலமாக நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், முடிந்த வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்