ஏற்கனவே விற்கப்பட்ட நிலம் வெளிநாட்டில் இருந்த உரிமையாளருக்கு அதிர்ச்சி.. நடந்தது என்ன?

x

கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராதையம்மாள்.

இவருக்கு சிவராஜன் மற்றும் நந்தகுமார் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

ராதையம்மாள் தனது 4 ஏக்கர் சொத்தை தனது இரு மகன்களின் பேரில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இளையமகன் நந்தகுமாரும், தாய் ராதையம்மாளும் உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சிவராஜன் கனடாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் திருபோரூர் அருகே உள்ள தன் நிலத்தையும், தன் தம்பியின் நிலத்தையும் விற்க முடிவு செய்திருக்கிறார்.

அப்போது அந்த நிலம் ஏற்கனவே வேறோருவர் பெயருக்கு விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இவ்விவகாரத்தில் திருப்போரூர் பத்திர பதிவு அலுழலகத்தில் நில உரிமையாளரின் இறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் சில ஆவணங்களை போலியாக தயாரித்து இடத்தை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதை அறிந்த சிவராஜ் செங்கல்பட்டு பத்திரபதிவு அலுவலகத்தில் இந்த நில மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மணு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்