குடியிருப்போர் சங்கத்திற்கு சந்தா தரவில்லை என குற்றச்சாட்டு... பெண் பேராசிரியை, அவரது மகன் மீது தாக்குதல்

x

திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகரில், ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 500 ரூபாய் பராமரிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு, வீடு ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறிய தனியார் கல்லூரி பேராசிரியர் கவிதாவிடம், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சந்தா கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு கவிதா, அடுத்த மாதம் தருவதாக கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்த பேராசிரியர் கவிதா மற்றும் அவரது மகனை நுழைவாயிலில் இருந்த காவலாளி ஆபாசமாக பேசி, இருவரையும் தாக்கியதுடன், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கவிதா மீது புகார் கொடுத்துள்ளனர். பேராசிரியர் கவிதா, குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மீது புகார் கொடுத்துள்ளார். இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் காவலாளி தாக்கும் காட்சி இருந்ததை கண்டறிந்தனர். ஆனால், இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காவலாளி தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்