கோயில் நிலங்களை ஆக்கிரமித்த குற்றச்சாட்டு : அறநிலையத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதை எதிர்த்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்த தடை கோரி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவில் நிதி பயன்பாடு குறித்து துறை சாராத தணிக்கையாளர்களை கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் கோவில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்துள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, இது சம்பந்தமாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அறநிலையத் துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com