"அனைத்து பல்கலை. மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை" - கேரள உயர்கல்வித்துறை அமைச்சர்

"அனைத்து பல்கலை. மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை" - கேரள உயர்கல்வித்துறை அமைச்சர்
Published on

கேரளா மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை மற்றும் மகப்பேறு விடுப்பு அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்துள்ளார். மேலும் 18 வயதை கடந்த மாணவிகளுக்கு அதிகபட்சமாக 60 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாதவிடாயின் போது மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com