"அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்தும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளது" - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

x

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரமண மகரிஷியின் 143 ம் ஆண்டு ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஸ்ரீ ரமணஅநுபூதி பற்றிய விளக்கவுரை புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பல பிரச்சினைகள் வந்த போதும் அவை இந்தியாவின் ஒற்றுமையை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவை பொறுத்தவரை தேச பக்தியும்,தெய்வ பக்தியும் பிரிக்க முடியாத ஒன்று என குறிப்பிட்ட அவர், இந்தியா என்பது அரசர்களால் ஒருங்கிணைக்கப்படவில்லை என்றார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறும் அனைத்தும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் அனைவரும் சரிசமம் என்பதை மதச்சார்பின்மை குறிப்பதாக

குறிப்பிட்டார். அத்துடன், தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி என்பது தேசபக்தி மற்றும் தெய்வபக்தி இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் ஆளுநர் ரவி வலியுறுத்தி உள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்